ஆன்மிகம்
பைரவர்

பைரவரை எந்த கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பிரச்சனைகள் தீரும்

Published On 2020-10-09 04:22 GMT   |   Update On 2020-10-09 04:22 GMT
பைரவரை விரதம் இருந்து வழிபட்டால் பில்லி, சூனியம் ஏவல் கடுமையான நோய், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மேலும் எந்த கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.
* விரதம் இருந்து ஞாயிறு அன்று ராகுகாலத்தில் வாசனை தைல அபிஷேகம் செய்து வடைமாலை சார்த்தி அா்ச்சனை செய்தால் திருமணம் கைக்கூடும்.

* விரதம் இருந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவரை சிகப்பு அரளியால் அா்ச்சித்து வடைமாலை சார்த்தி தேன் கலந்த பேரிச்சை வெல்லப் பாயசம் நிவேதனம் செய்து வந்தால் குழந்தை பேறுசித்திக்கும்.....

* வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வில்வ இலையால் அா்ச்சித்தால் வறுமை நீங்கும்

* விரதம் இருந்து சிவாலயங்களில் உள்ள பைரவரை வழிபட்டால் சனீஸ்வரரால் ஏற்படும் பாதிப்புக்கள் வெகுவாக குறைந்துவிடும்.

* சித்திரை மற்றும் ஐப்பசி மாதத்தி்ல் பரணி நட்சத்திரத்தில் இவரை விரதம் இருந்து பூஜித்தால் அதிவிசேஷம். வெள்ளி செவ்வாய் இவருக்கு உகந்த தினங்கள். கா்மவினை தொந்தரவு பில்லி, சூனியம் ஏவல் கடுமையான நோய், வழக்குகளில் வெற்றி இழந்த பொருட்கள் கிடைக்கவும், விபத்துக்கள் ஏற்படாதிருக்கவும் இம்மாதங்களில் விரதம் இருந்து வழிபடலாம்....
Tags:    

Similar News