ஆன்மிகம்
பைரவர்

பைரவரை விரதம் இருந்து வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்

Published On 2020-07-28 08:27 GMT   |   Update On 2020-07-28 08:27 GMT
விரதம் இருந்து ஒன்பது தேய்பிறை அஷ்டமிகளில் பைரவருக்கு சிவப்பு நிற அரளிப்பூ அணிவித்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல மக்களையும், 16 செல்வங்களையும் பெறலாம்.
* ஒருவரது ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்து கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது பைரவர் வழிபாடு.

* கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாக, சத்ருத்ர சம்ஹிதாவின் 8-வது அத்தியாயம் குறிப்பிடுகிறது.

* ஜாதகத்தில் 19 வருடம் சனி திசை நடப்பில் இருந்தால், அந்த ஜாதகத்துக்குரியவர் சனிக்கிழமையில் பைரவர் விரதம் இருந்து வழிபாட்டை செய்து வர வேண்டும்.

* செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் விரதம் இருந்து, எமகண்டம் நேரத்தில் பைரவருக்கு தயிர், தேங்காய், தேன் படைத்து, வில்வ, வன்னி இலை, செவ்வரளி மாலை அணிவித்து, வேக வைத்த கொள்ளும், சர்க்கரையும் கலந்து செய்த உருண்டை, கொள்ளுப்பொடி கலந்த அன்னம், விளாம்பழம் அல்லது வில்வப்பழம் படைத்து ஒரு பூசணியில் மிளகு தீபமும், ஒரு தேங்காயில் மிளகு தீபமும் ஏற்றி அர்ச்சனை செய்து வந்தால் கேது தசையின் பாதிப்புகள் நீங்கி நல்லது நடக்கும்.

* பிரதோஷம் அல்லது மாதசிவராத்திரி அன்று சிவலிங்கம் அல்லது விநாயகருக்கு மூன்று நெய்தீபம் ஏற்றி பைரவருக்கு தயிர் அன்னம், வடைமாலை செலுத்தி ஐந்து பழங்களில் மிளகு தீபம் ஏற்றி பஞ்சதீபமாக வழிபட்டால் வாழ்க்கையிலும், வழக்குகளிலும் வெற்றி கிட்டும்.

* வலம்புரி சங்கில் ஐந்து வித எண்ணெய், சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்து தாமரை தண்டு திரியையும் சிவப்பு துணியையும் சேர்த்து திரியாக திரித்து 48 நாட்கள் பைரவருக்கு வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செவ்வாய், சனிக்கிழமையில் செய்து வந்தால் வாஸ்து தோஷம் நிவர்த்தியாகும்.

* வீட்டில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கணபதி, லட்சுமி, நவக்கிரக, மிருத் துஞ்சனம், தன்வந்திரி யாகங்களை செய்து கடைசியில் மஹா ருத்ர பைரவர் யாகம் செய்வது நல்லது.

* விரதம் இருந்து ஒன்பது தேய்பிறை அஷ்டமிகளில் பைரவருக்கு சிவப்பு நிற அரளிப்பூ அணிவித்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல மக்களையும், 16 செல்வங்களையும் பெறலாம்.

* அஷ்டமி, ஆயில்யம், சுவாதி, பரணி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். செய்தொழிலில் லாபம் வரும்.
Tags:    

Similar News