ஆன்மிகம்
மகாலட்சுமி

எல்லா செல்வங்களும் தரும் மகாலட்சுமி சக்கரம்- விரதம் இருந்து வழிபடும் முறை

Published On 2020-06-12 11:41 IST   |   Update On 2020-06-12 11:41:00 IST
ஒருவருக்கு வாழ்வில் நல்ல காலம் ஆரம்பித்து விட்டது என்றால் முனைப்புடன் செயல் படும் ஆற்றலும், தைரியமும், பக்கபலமும் வந்துவிடும். இவ்விதம் வருவதற்கு மகா லட்சுமி சக்கரத்தை வைத்து விரதம் இருந்து பூஜை செய்து வர வேண்டும்.
எல்லாவிதமான வசதிகளையும்- அதாவது வீடு, மனை, மாடு, கன்றுகள், நிலம், புலம், செல்வ வளம் பிறரால் பாராட்டப்படும் நிலை போன்றவை அனைத்தையும் பெற்று வாழ்வில் சகலவிதமான சுக போகங்களுடன் வாழ்வதற்கு அவசியம் லட்சுமி கடாட்சம் வேண்டும். இதற்குத் துணை புரிவது மகாலட்சுமி மந்திரமும் சக்கரமுமாகும்.
மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்துவிட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது. பொருட் செல்வம் வர ஆரம்பித்து விட்டால் இதர செல்வங்களும் தானாகவே தேடி வரும் என்பதில் சந்தேகமில்லை.

ஸர்வ ஸம்பத் ஸம்ருத்யர்த்தம் என்ற மந்திரத்தைத் தினந்தோறும் இருபத்தைந்தாயிரம் முறை ஆறு நாட்கள் உச்சரித்து வர வேண்டும். அதிகாலை வேளையில் காலைக் கடன்களை முடித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

மகாலட்சுமியை விரதம் இருந்து வணங்கும் போது தேவிக்கு நிவேதனமாக தேன் அல்லது பாயாசம் வைத்து வழிப்பட வேண்டும். தேவியின் கடைக்கண் பார்வைப்பட்டால் வாழ்வில் முன்னேற்றம் தானாக வரும் அத்தனை செல்வங்களும் பெருக ஆரம்பிக்கும்.

ஒருவருக்கு வாழ்வில் நல்ல காலம் ஆரம்பித்து விட்டது என்றால் முனைப்புடன் செயல் படும் ஆற்றலும், தைரியமும், பக்கபலமும் வந்துவிடும். இவ்விதம் வருவதற்கு மகா லட்சுமி சக்கரத்தை வைத்து விரதம் இருந்து பூஜை செய்து வர வேண்டும்.

Similar News