ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலையை விரதம் இருந்து கிரிவலம் வந்தால் கிடைக்கும் பலன்கள்

Published On 2020-05-06 02:09 GMT   |   Update On 2020-05-06 02:09 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை விரதம் இருந்து கிரிவலம் வருபவர்களுக்கு, பிறவிப் பணி நீங்கும் என்று அருணாச்சல புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். பவுர்ணமி நாட்களில் இந்த மலையை பக்தா்கள் அனைவரும் விரதம் இருந்து கிரிவலம் வந்து வழிபாடு செய்வாா்கள். இந்த மலையை வலம் வர வேண்டும் என்ற நினைப்போடு, ஓரடி எடுத்து வைத்தாலே, யாகம் செய்த பலன் கிடைக்கும். மேலும் பூமியை சுற்றி வந்த பலனும் சேரும்.

இரண்டடி எடுத்து வைத்தால், ராஜசூய யாக பலன் உண்டு. சர்வ தீர்த்தங்களிலும் நீராடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலனும், நான்கடியில் அஷ்டாங்க யோக பலனும் உண்டாகும். இப்படி ஒவ்வொரு பலன்கள் வந்து சேரும். திருவண்ணாமலையை விரதம் இருந்து கிரிவலம் வருபவர்களுக்கு, பிறவிப் பணி நீங்கும் என்று அருணாச்சல புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இது தவிர எந்தெந்த கிழமைகளில், விரதம் இருந்து கிரிவலம் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும் இங்கே பார்க்கலாம்.

* ஞாயிற்றுக்கிழமை அன்று திருவண்ணாமலை மலையை வலம் வந்தால் சூரிய மண்டலத்தைப் பிளந்து சிவபதம் அடையலாம்.

* திங்கட்கிழமை அன்று வலம் வந்தால் ஏழு உலகங்களையும் ஆளலாம்.

* செவ்வாய்க்கிழமை அன்று வலம் வந்தால் கடனையும் தரித்திரத்தையும் தொலைத்து, பிறவிப்பிணி நீங்கப்பெறலாம்.

* புதன்கிழமை அன்று வலம் வந்தால் சகல கலைகளும் தெரிந்த தேவர்களாக மாறலாம்.

* வியாழக்கிழமை அன்று வலம் வந்தால், முனிவர்களுக்கும் மேலான பதவியை அடையலாம்.

* வெள்ளிக்கிழமை அன்று வலம் வந்தால் விஷ்ணுபதம் கிடைக்கும்.

* சனிக்கிழமை அன்று வலம் வந்தால் நவக்கிரகங்களின் அருளைப் பெறலாம்.

எம்.ஏ.நிவேதா, திருச்சி.
Tags:    

Similar News