ஆன்மிகம்
சிவன் பூஜை

நாளை சித்திரை வளர்பிறை பிரதோஷ விரதம்

Published On 2020-05-04 06:21 GMT   |   Update On 2020-05-04 06:21 GMT
சித்திரை மாதத்தில் வருகின்ற சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி விரதம் இருந்து வணங்கி வழிபடுபவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.
பல சிறப்புகளை கொண்ட இந்த சித்திரை மாதத்தில் சிவனை வழிபடுவதற்குரிய சிறப்பு தினமாக சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினம் வருகிறது இந்தப் பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை எப்படி வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பல சிறப்புகள் நிறைந்த சித்திரை மாதத்தில் அனேகமாக அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற்கொள்வதற்கும் ஏற்றதாக இருக்கிறது. அதிலும் மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் மங்களங்களை அதிகம் தரும் மாதமான சித்திரை மாதத்தில் வருகின்ற இந்த சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி விரதம் இருந்து வணங்கி வழிபடுபவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.

சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் கோவில் மூடிப்பட்டுள்ளதால் வீட்டிலேயே சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைத்து பூஜை செய்து வழிபாடு செய்யலாம்.

இம்முறையில் சித்திரை வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை விரதம் இருந்து வணங்குவதால் உங்களின் தரித்திரங்கள், துரதிர்ஷ்டங்கள் நீங்கி வாழ்வில் வளமை பெருகும். திருமண தடை, குழந்தை பேறில்லாமை போன்ற குறைகள் நீங்கும். நவகிரகங்களில் புதன் பகவான் பெருமாளின் அம்சமாக இருப்பதால், அவரின் அருட்பார்வை உங்களுக்கு வாழ்வில் சுகங்கள், செல்வ சேர்க்கை உண்டாக்கும்.
Tags:    

Similar News