ஆன்மிகம்
இன்று கணவனை காக்க பெண்கள் கடைபிடிக்கும் நோன்பு அனுஷ்டிக்கும் முறை

இன்று கணவனை காக்க பெண்கள் கடைபிடிக்கும் நோன்பு அனுஷ்டிக்கும் முறை

Published On 2020-03-14 03:24 GMT   |   Update On 2020-03-14 03:24 GMT
சாவித்திரி அனுஷ்டித்து வந்த நோன்பு, அவளது காலம் வரை ‘கவுரி நோன்பு’ எனக் கூறப்பட்டது. அதன் பின்னர் ‘சாவித்திரி நோன்பு’ என்ற பெயர் பெற்றது.
விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சொம்பில் மாவிலை, தேங்காய் வைத்து, அதற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்டி, அருகில் இஷ்டமான அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாக ஆவாஹாகனம் செய்துகொள்ள வேண்டும். கார் அரிசியும், காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனமாக வைத்து வழிபடவேண்டும். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து, கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்த பிறகு, எருமை மாட்டிற்கு தீவனம் அளிக்க வேண்டும்.

சாவித்திரி அனுஷ்டித்து வந்த நோன்பு, அவளது காலம் வரை ‘கவுரி நோன்பு’ எனக் கூறப்பட்டது. அதன் பின்னர் ‘சாவித்திரி நோன்பு’ என்ற பெயர் பெற்றது. ‘மாசிக்கயிறு பாசி படியும்’ என்பது சொல் வழக்கு. எனவே பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, கணவரை நோய் நொடியின்றி காக்க, இந்த நோன்பு கவசமாக இருக்கிறது. இந்த நோன்பை நோற்பதன் பலனாக சாவித்திரி நூறு பிள்ளைகளுடன் சவுபாக்கிய வசதியாக பல்லாண்டு காலம் வாழ்ந்தாள் என்கிறது புராணம். நாமும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து சகல சவுபாக்கியங்களும் பெறலாம்.
Tags:    

Similar News