ஆன்மிகம்
தம்பதிகள் ஒற்றுமைக்கு கடைபிடிக்க வேண்டிய விரதம்

தம்பதிகள் ஒற்றுமைக்கு கடைபிடிக்க வேண்டிய விரதம்

Published On 2020-02-27 05:21 GMT   |   Update On 2020-02-27 05:21 GMT
கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசி பவுர்ணமியன்று விரதம் இருந்து கிரிவலம் வருவதால், கணவனின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.
பொதுவாகவே பவுர்ணமி அன்று இருக்கும் விரதம் நமக்கு சிறப்பான பலன் தரும். மாசி மாத பவுர்ணமியன்று சத்யநாராயண பூஜை செய்வதும், மாலை நேரத்தில் சூர்ய அஸ்தமனத்திற்கு பின்னர் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வதும் அதிக நன்மைகள் தரும். மாசி மாத பவுர்ணமி கிரிவலத்தின்போது வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்தால் உங்களின் பல மனிதப்பிறவிகளின் கர்மங்கள் உடனே தொலைந்ததாக அர்த்தம்.

பிறவா பேரருள் உங்களுக்கு வாய்க்கும். மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை திருத்தலத்தில் கிரிவலம் செல்லுவது அற்புத பலன்களை அள்ளித்தரும். கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிவோர்கள்,வழக்கறிஞர் ஆகியோர் அதிகப் பலன்களை அடைய முடியும்.

கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசி பவுர்ணமியன்று விரதம் இருந்து கிரிவலம் வருவதால், கணவனின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.
கொடுத்த கடனை திருப்பிப் பெறமுடியாமல் நொடித்துபோனவர்கள் மாசிபவுர்ணமி கிரிவலத்தால், அதிலிருந்து மீளமுடியும். மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்லுவதால் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள்,மின் அணுத்துறையில் பணிபுரிவோர்கள்,நீதித் துறையில் இருப்பவர்கள் நியாயமான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.
Tags:    

Similar News