ஆன்மிகம்
பசுவிற்கு கீரை கொடுப்பது நன்று

பகை விலகிப் பாசம் கிடைக்க விரதம்..

Published On 2020-02-24 06:57 GMT   |   Update On 2020-02-24 06:57 GMT
பவுர்ணமி அன்று விரதமிருந்து கன்றுள்ள பசுவிற்கு கீரை, வைக்கோல், பழம் போன்ற உணவுகளைக் கொடுத்து வாலைத் தொட்டு வழிபடுவது நல்லது.
ஒரு சிலர் மீது அவர்களது பெற்றோர் அதிகப் பாசம் வைத்திருப்பர். ஒரு சிலருக்கு பெற்றோர்களின் பாசம் கிடைக்காது. ‘நம்மை விட நம் சகோதரர்கள் மீது அதிகப் பாசம் காட்டுகிறார்களே’ என்று ஆதங்கப்படுவார்கள். தாய் வழி மற்றும் மாமன் மற்றும் சித்தி, சித்தப்பா போன்றவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டால் அவர்கள் ஒற்றுமையாக இருக்கவும், உதவிக்கரம் நீட்டவும் ஒரு எளிய வழி இருக்கிறது.

பவுர்ணமி அன்று விரதமிருந்து கன்றுள்ள பசுவிற்கு கீரை, வைக்கோல், பழம் போன்ற உணவுகளைக் கொடுத்து வாலைத் தொட்டு வழிபடுவது நல்லது. அல்லது பசுவும், கன்றும் உள்ள உருவப் பொம்மைகளின் படங்களை வீட்டில் வைத்து கோமாதாவை வழிபாடு செய்தும் வரலாம். சந்திர ஓரையில் வெள்ளை வண்ணப் பொருட்களை தானமாகக் கொடுக்கலாம். இதனால் நாம் மட்டுமல்ல, தாய்வழி உறவினர்கள் எல்லோருடைய பாசமும் கூடும். நேசமும் கூடும். உறவினர் பகை அகலும்.
Tags:    

Similar News