ஆன்மிகம்
விரதத்தை தொடங்கிய சிவாலய ஓட்ட பக்தர்கள்

சிவராத்திரி: விரதத்தை தொடங்கிய சிவாலய ஓட்ட பக்தர்கள்

Published On 2020-02-17 03:26 GMT   |   Update On 2020-02-17 03:27 GMT
சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். இதையொட்டி சிவன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் முன்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணர் கோவில் உள்பட 12 கோவில்களுக்கு பக்தர்கள் நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். இந்த சிவாலய ஓட்டம் சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு சிவராத்திரி வருகிற 21-ந் தேதி வருகிறது. இதையொட்டி சிவாலய ஓட்டம் 20-ந் தேதி புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது.

இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நேற்று முதல் விரதம் மேற்கொள்கிறார்கள். இதையொட்டி நேற்று காலையில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து வருகிற விரத நாட்களில் அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவுகளை மட்டுமே உண்பார்கள்.

19-ந் தேதி தீயில் வேக வைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். மாறாக நொங்கு, இளநீர், பழம் போன்றவற்றை மட்டுமே உண்பார்கள். பின்னர், 20-ந் தேதி முன்சிறை, திருமலை மகா தேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கி, 21-ந் தேதி நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் ஓட்டத்தை முடித்து கொள்வார்கள். அங்கு விடிய விடிய கண்விழித்து அமர்ந்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
Tags:    

Similar News