ஆன்மிகம்
சூரிய பூஜை

சூரிய பகவானை வழிபடும் விரதம்

Published On 2020-02-15 06:19 GMT   |   Update On 2020-02-15 06:19 GMT
கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
சூரிய பகவானை வழிபடும் விரதமானது ரதசப்தமி ஆகும். இது தை மாதத்தில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகின்றது. ரதசப்தமி அன்று சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணிப்பதை தொடங்குகின்றன. இந்த நாளில் சூரிய உதயத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும்.

கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரத சப்தமி விரதம் சூரிய உதயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வடை, பாயாசம் இவற்றை சூரியனுக்கு நைவேத்தியமாக படைக்கலாம். இந்த தினத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பண்டங்களை பசுவிற்கு தானமாகக் கொடுப்பது நல்லது.

வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் சூரியனுக்கு நைவேத்தியம் படைப்பது இன்னும் சிறந்தது. ரதசப்தமி அன்று தொடங்கும் தொழில்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் நாம் மற்றவர்களுக்கு செய்யக்கூடிய தனமானது பல மடங்கு புண்ணியத்தை நமக்கு தேடித்தரும். இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் துன்பப்படாமல் வாழ்வதற்கு தேவையான அருளை வழங்க வேண்டுமென்று நாம் அனைவரும் அந்த சூரிய பகவானை பிராத்திப்போம்.
Tags:    

Similar News