ஆன்மிகம்
சிவபெருமான்

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்

Published On 2020-02-14 05:13 GMT   |   Update On 2020-02-14 05:13 GMT
வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று ஔவையார் பாடி வைத்தார். ஆலயம் இல்லாத ஊரில் அடியெடுத்து வைக்கக்கூட ஆன்றோர்கள் யோசித்திருக்கின்றார்கள். அந்த ஆலயம் இரவு முழுவதும் திறந்திருக்கின்ற திருநாள்தான் சிவராத்திரி. வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும். இந்த விழிப்பு விரதத்தை ‘மங்கலம் தரும் மகா சிவராத்திரி’ என்றும், ‘செல்வ வளம் தரும் சிவராத்திரி’ என்றும், ‘சொர்க்கத்தை வழங்கும் தூய சிவராத்திரி’ என்றும், ‘எதிர்ப்புகளை அகற்றும் இனிய சிவராத்திரி’ என்றும், ‘காரிய வெற்றி வழங்கும் கனிவான சிவராத்திரி’ எனறும் மக்களால் வர்ணிகப்படுகிறது.

சிவன் பெயரை உச்சரித்து உச்சரித்து சிறப்புகளை பெற்ற, அறுபத்து மூவரைப் போல நீங்களும் மாற வேண்டுமானால் தேர்ந்தெடுக்க வேண்டிய நாள் சிவராத்திரி. வாழ்வில் இருளை அகற்றி ஒளியை மேற்கொள்ள நாம் விழித்திருந்து, விரதமிருந்து சிவனை வழிபட்டால் ‘அசுவமேத யாகம்’ செய்த பலன் கிடைக்கும்.

மகாவிஷ்ணு இந்த விரதம் இருந்துதான் சக்கராயுதத்தையும், மகாலட்சுமியையும் பெற்றார் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். பிரம்மதேவன், சரஸ்வதியைப் பெற்றதும் இந்த நாளில்தான். கல்வி விருத்தி பெறுவதற்கும், காரிய வெற்றி கூடவும் இந்த விரதத்தை மேற்கொள்வது நல்லது.
Tags:    

Similar News