ஆன்மிகம்
சூரியன்

ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களை போக்கும் விரதம்

Published On 2020-01-25 08:39 GMT   |   Update On 2020-01-25 08:39 GMT
ரத சப்தமி அன்று விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்வதால் ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை.
சூரியன் தனது ரதத்தை தெற்கில் இருந்து வடக்கு திசையை நோக்கி திருப்புவதால் இந்த நாள் ‘ரதசப்தமி’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த நாள் 1-2-2020 (சனிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து நீர் நிலைகளுக்கு சென்று கிழக்கு நோக்கி நின்று, ஏழு எருக்கு இலைகள், அட்சதை, அருகம்புல், மஞ்சள் பொடி ஆகியவற்றை தலையில் வைத்துக் கொண்டு நீராடினால், நவக்கிரக தோஷம் அகலும். இன்றைய தினம் விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்வதால் ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை.

ரத சப்தமி பெருமாள் கோவில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரதத்தில் பெருமாள் வலம் வருவார். ரதத்தில் வீற்றிருக்கும் பெருமாளை தரிசித்தால் நம் வாழ்க்கை வளம் பெறும்.
Tags:    

Similar News