ஆன்மிகம்
மகாலட்சுமி

தை வெள்ளிக்கிழமை விரதம்

Published On 2020-01-17 07:57 GMT   |   Update On 2020-01-17 07:57 GMT
தை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். கணவனின் ஆயுள் அதிகரிக்கும்.
தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில், விரதம் இருந்து குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து, அதில் அம்மனை ஆவாகனம் செய்து பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு ‘லலிதா சகஸ்ர நாமம்’ பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

தை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். கணவனின் ஆயுள் அதிகரிக்கும். திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.

ஒருவரது ஜனன கால ஜாதகத்தில் சுக்ரன் நீச்சம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்று வலிமை குறைந்தவர்கள், பெண் சாபத்தால் பாதிக்கப்பட்டோர், தை வெள்ளிக்கிழமையில் சப்த கன்னிகளை வழிபட்டால் திருமண தடை அகலும். சுக்ர தோஷம் நீங்கும்.

அதேபோல் ஜனன கால ஜாதகத்தில் 8-ல் செவ்வாய், கேது இருந்து மாங்கல்ய பாக்கியம் குறைந்தவர்கள், தை வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து வயதான சுமங்கலிப் பெண்களை அழைத்து, உணவு பரிமாறி, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் கொடுத்து ஆசி பெறுவது மிகச்சிறப்பு.
Tags:    

Similar News