ஆன்மிகம்
கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும் விரத பூஜை

கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும் விரத பூஜை

Published On 2020-01-16 10:18 IST   |   Update On 2020-01-16 10:18:00 IST
கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனைகள் நீங்கி, ஒற்றுமை பலம் பெற ஒரு எளிய விரத வழிபாடு உள்ளது. மோகினி வித்யா விரத பூஜை என்ற வழிபாடு தான் அது.
பல வீடுகளில் கணவன் மனைவி இவர்களுக்கிடையே சதாகாலமும் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இதனால் நம் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு இடையேயும் ஒற்றுமை இருக்காது. ஒரு வீட்டில் கணவன் மனைவியின் உறவு சுமூகமாக இருந்தால் தான் அந்த ஒட்டுமொத்த குடும்பத்தினால் நிம்மதியாக வாழ முடியும். கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனைகள் நீங்கி, ஒற்றுமை பலம் பெற ஒரு எளிய விரத வழிபாடு உள்ளது. மோகினி வித்யா விரத பூஜை என்ற வழிபாடு தான் அது. இந்த பூஜையை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

ஓம் மோகினி தேவி வஜ்ரேஸ்வரி காம் மாலினி
மம பிரியந்தம் ஆகர்சய ஆகர்சய சுவாகா

விரதம் இருந்து பூஜை தொடங்கும் நாள் அன்று முதலில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். கிழக்குப் பக்கம் பார்த்தபடி அமர்ந்து கொள்ள வேண்டும். ஒரு வெற்றிலையில் சிறிதளவு குங்குமத்தை வைத்து தண்ணீரை தொட்டு மோதிர விரலால், குழைக்கும் போது, மேலே கொடுக்கப்பட்டுள்ள மோகினி வித்யா மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அந்த குங்குமத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விரத பூஜையை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்து முடித்துவிட வேண்டும். இதனால் கணவன் மனைவி ஒற்றுமையுடன் சேர்ந்து நம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும்.

Similar News