ஆன்மிகம்
வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்கும் முறை

நாளை வைகுண்ட ஏகாதசி: விரதம் இருக்கும் முறை

Published On 2020-01-05 11:05 GMT   |   Update On 2020-01-05 11:05 GMT
பக்தியை வெளிப்படுத்துவதற்கும், புண்ணியத்தை அடைவதற்கும் உகந்ததொரு விரதம் என்றால், ‘வைகுண்ட ஏகாதசி விரதம்’ என்றே கூறலாம்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளவேண்டும். மறுதினம் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும். பகல் மற்றும் இரவு முழுவதும் விரதம் இருப்பதுடன் தூங்காமல் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும்.

ஏகாதசிக்கு மறுதினம் துவாதசியன்று அதிகாலையில் சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளைச் சேர்த்து உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சமைத்து படையலிட்டு பின்னர் “கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!!!” என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். சிலர் 21 வகையான காய்கறிகளை சமைத்து படையலிட்டு, பின்னர் உண்பது வழக்கம்.

மிக முக்கியமாக உணவு சாப்பிடும் முன் அதை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு சாப்பிட வேண்டும். அன்று உணவு அருந்துவதை ‘பாரணை’ என்று கூறுவர். உணவு முடித்தபின்னர் அன்று பகலிலும் தூங்காமல் இருக்க வேண்டும். 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 80 வயதிற்குட்பட்ட பெரியவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News