ஆன்மிகம்
ஐயப்பன்

நாளை ஐயப்ப விரதம் ஆரம்பம்

Published On 2019-11-16 05:58 GMT   |   Update On 2019-11-16 05:58 GMT
ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து, அந்த விரதம் பூர்த்தியானால் மட்டுமே ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரத்தைத் தொடங்குவது வழக்கம். இன்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குற்றால அருவியில் புனித நீராடி மாலை அணிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சென்று ஐயப்பனை தரிசிப்பார்கள். மண்டல பூஜையை முன்னிட்டு 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டதால் ஒருசிலர் நேற்றே மாலை அணிந்தனர். இன்று மாதப்பிறப்பை முன்னிட்டு பலரும் கோவில்களில் குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர்.

கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து, அந்த விரதம் பூர்த்தியானால் மட்டுமே ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். 
Tags:    

Similar News