ஆன்மிகம்

நலம் தரும் ராகுகால விரத பூஜை

Published On 2019-03-19 14:09 IST   |   Update On 2019-03-19 14:11:00 IST
கன்னிப்பெண்களும், சுமங்கலிப் பெண்களும் ராகுகால விரத பூஜை செய்தால் அவர்கள் மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும்.
கன்னிப்பெண்களும், சுமங்கலிப் பெண்களும் ராகுகால விரத பூஜை செய்தால் அவர்கள் மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும்.

பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் ராகுகால விரத பூஜை செய்வார்கள். ஆனால் அனைத்துக் கிழமைகளிலும் ராகுகாலத்தின்போது பூஜைகள் செய்து வழிபடலாம். அப்படி வழிபடும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு வழிபட வேண்டும்.

அப்படி வழிபட்டால் அனைத்து நலன்களும் பெறலாம். பலன்கள் இரட்டிப்பாகும் என்பது நம்பிக்கை.

ஞாயிற்றுக்கிழமை    - பாரிஜாதம், வில்வம்
திங்கட்கிழமை    - வெள்ளை அரளி
செவ்வாய்க்கிழமை    - செம்பருத்தி, செவ்வரளி
புதன்கிழமை    - துளசி
வியாழக்கிழமை    - சாமந்தி
வெள்ளிக்கிழமை    - வெள்ளை அரளி
சனிக்கிழமை    - சங்கு புஷ்பம்
Tags:    

Similar News