ஆன்மிகம்

மாதங்களும் விரதங்களும்

Published On 2019-02-06 07:15 GMT   |   Update On 2019-02-06 08:09 GMT
வருடத்தில் 12 மாதங்களும் முக்கிய தினங்களில் விரதங்கள் இருக்கலாம். அதில் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த விரதங்கள் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற அறிந்து கொள்ளலாம்.
வருடத்தில் 12 மாதங்களும் முக்கிய தினங்களில் விரதங்கள் இருக்கலாம். அதில் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த விரதங்கள் இருந்தால் பலன் கிடைக்கும் என்ற நெறிமுறை உண்டு. அதன்படி விரதம் இருப்பது நல்லது.

1. வளர்பிறை சப்தமிதிதி - வாழ்வில் வளம்.

2. பௌர்ணமி - சிவன் - லட்சுமி கடாட்சம், சகல சௌக்யம்.

3. பௌர்ணமி - சித்திரகுப்தர் - ஆயுள் பலம், புண்ணிய பலம்.

4. சுக்கிலபட்சத்து சுக்ரவாரம் - வெள்ளி - பார்வதிதேவி - சர்க்கரை நிவேதனம் - இனியவாழ்வு அமைய.

5. பரணி நட்சத்திரம் - பைரவமூர்த்தி - தயிர்சாதம் நிவேதனம் - எதிரி பயம் போகும். தடைகள் விலகும்.

6. மூல நட்சத்திரம் - மகாலட்சுமி நாராயணன் இஷ்டசித்திகள் - விஷ்னுலோகம் அடைய.

7. சுக்லபட்ச திரிதியை - உமா - மகேஸ்வரர் - தானம் செய்தல் - சிறப்பான வாழ்க்கை,சிவலோகம் அடைய.

விரதங்கள் - வைகாசி

1. பௌர்ணமி - சிவன் - சிவனருள்.
2. விருஷப - ரிஷபவாகனத்தில் இருக்கும் உமாமகேஸ்வரர் - நீண்ட ஆயுள்,பொருள்,தானியம்,கல்வி,வாகன யோகம்.
3. விசாகம் - முருகன் - முருகன் அருள்,மழலைச் செல்வம்.

விரதங்கள் - ஆனி

1. வளர்பிறை சப்தமி திதி - துர்க்கந்தநாசன விரதம் - சருமநோய்கள் நீங்கும்.
2. ரம்பா த்ரிதியை - த்ரிதியை - விரதம்,சிவன் வழிபாடு - அரம்பையர்கள் வாழ்த்து,அழகு,செல்வம் நிறைந்து வாழ.
3. பௌர்ணமி - சிவன் - எண்ணியவை கைகூடும் .

விரதங்கள் - ஆடி

1. வளர்பிறை சப்தமி திதி - அபய சப்தமி விரதம் - சூரிய உலகில் இடம்.
2. பௌர்ணமி - சிவன் - பகை விலகும் - வரலட்சுமி - செல்வம்சேரவும்,மங்களங்கள் பெருகவும்.

விரதங்கள் - ஆவணி

1. வளர்பிறை சப்தமி திதி - சகல பாக்யம் கிட்டும்.
2. பௌர்ணமி - சிவன் - வேண்டியவை கிட்டும்.

விரதங்கள் - புரட்டாசி

1. ஜேஷ்டா - சுக்லபட்ச அஷ்டமி - சிவன், விநாயகர் பூஜை - சந்ததி சிறப்பாக வளர.
2. மகாலட்சுமி - துவாதசிமுதல்16 நாட்கள் - லட்சுமி பூஜை - சகல நலமும் வளமும் பெற.
3. தசாவதார - சுக்லதசமியன்று.
4. கதளி, கௌரி - சுக்லபட்ச சதுர்த்தசி - உமாமகேஸ்வர பூஜை - இஷ்ட சித்தி.
5. அந்தந்த - பூர்வபட்ச சதுர்தசி - விஷ்னு பூஜை - காரியம் ஈடேற.
6. பிரதமை/நவராத்திரி பிரதமை - சுக்லபட்ச பிரதமை (அஸ்த நட்சத்திரம் கூடினால் சிறப்பு) - ஓன்பது நாள் தேவி பூஜை - தீயசக்திகாளின் தாக்கம் விலக.
7. சஷ்டி - சுக்லபட்ச ஷஷ்டி - பரமேஸ்வரி பூஜை - அம்பிகையின் அருளாசி.
8. வளர்பிறை சப்தமி திதி - அனந்தசப்தமி - கண்ணொளி பிரகாசிக்கும்.
9. பௌர்ணமி - சிவன் - பெருட்செல்வம் பெருகும்.
10. அமுக்தா - சுக்லபட்ச சப்தமி - உமாமகேஸ்வரர் - புத்ர,பௌத்ர விருத்தி. 
Tags:    

Similar News