ஆன்மிகம்

நிறைந்த செல்வம் தரும் மகாலட்சுமி விரத வழிபாடு

Published On 2018-07-28 07:36 GMT   |   Update On 2018-07-28 07:36 GMT
ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரியை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி தெய்வங்களை விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் ஆலயங்களில் குத்துவிளக்கு பூஜை நடைபெறும்.

அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு, ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த ‘வரலட்சுமி விரதம்’ மேற்கொள்ளப்படுகிறது. 
Tags:    

Similar News