ஆன்மிகம்

சனி பகவானை சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபட வேண்டும்

Published On 2018-05-05 09:11 GMT   |   Update On 2018-05-05 09:11 GMT
சனி தோஷம், சனி திசை, புத்தி, ஜென்ம சனி நடப்பவர்கள் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர வேண்டும்.
புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.

ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும். புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும்.

சனி தோஷம், சனி திசை, புத்தி, ஜென்ம சனி நடப்பவர்கள் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர வேண்டும். மாதம் ஒரு சனிக்கிழமை வயதானவர்கள், ஊனமுற்றவர்களுக்கு ஏதாவது உங்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்க.

தினமும் காகத்திற்கு சாதம் வைத்து வரவும். 
Tags:    

Similar News