ஆன்மிகம்

கால பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி விரத நாட்கள்

Published On 2018-05-02 08:50 GMT   |   Update On 2018-05-02 08:50 GMT
விரதம் இருந்து கால பைரவரை வழிபாடு செய்ய உகந்த விளம்பி வருடத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.  தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.

சித்திரை 25 (8-5-2018) செவ்வாய்க்கிழமை
வைகாசி 23 (6-6-2018) புதன்கிழமை இரவு
வைகாசி 24 (7-6-2018) வியாழக்கிழமை பகல்
ஆனி 22 (6-7-2018) வெள்ளிக்கிழமை
ஆடி 19 (4-8-2018) சனிக்கிழமை இரவு
ஆடி 20 (5-8-2018) ஞாயிற்றுக்கிழமை பகல்
ஆவணி18 (3-9-2018) திங்கட்கிழமை
புரட்டாசி 16 (2-10-2018) செவ்வாய்க்கிழமை
ஐப்பசி 14 (31-10-2018) புதன்கிழமை
கார்த்திகை 14 (30-11-2018) வெள்ளிக்கிழமை
மார்கழி 14 (29-12-2018) சனிக்கிழமை
தை 13 (27-1-2019) ஞாயிற்றுக்கிழமை இரவு
தை 14 (28-1-2019) திங்கட்கிழமை பகல்
மாசி 14 (26-2-2019) செவ்வாய்க்கிழமை
பங்குனி 14 (28-3-2019) வியாழக்கிழமை
Tags:    

Similar News