ஆன்மிகம்

தடைகளை விலக்கும் நடராஜர் விரதம்

Published On 2017-09-12 08:58 GMT   |   Update On 2017-09-12 08:58 GMT
ஆனி திருமஞ்சன தினம் அன்று விரதமிருந்து நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடப்பதைக் கண்டு வழிபட்டு வந்தால் தடைகள் அகலும்.
ஆனி மாதம் வரும் ஆனி திருமஞ்சன நாளில் விரதம் இருந்து நடராஜப் பெருமானை வழிபட்டு வந்தால் தடைகள் அகன்று வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும். ஆடலரசனுக்கு ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன விழா நடை பெறும். விரதமிருந்து அதில் கலந்து கொண்டு நடராஜரைத் தரிசித்தால் நலம் யாவும் வந்து சேரும்.

வருடத்தில் இரண்டு முறை நடராஜருக்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஒன்று மார்கழி மாத தரிசனம். மற்றொன்று ஆனி மாத நடராஜர் தரிசனம். அன்றைய தினம் விரதமிருந்து கூத்தபிரானைக் கும்பிட்டு சிவபுராணம் படித்தால் வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும். எதிரிகளும் விலகுவர்.
ஆற்றல் மிக்கவர்களாக உங்களை மாற்றுகிற ஆற்றல் நடராஜப் பெருமானின் அருட் பார்வைக்கு உண்டு.

ஆனி திருமஞ்சன தினம் அன்று விரதமிருந்து நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடப்பதைக் கண்டு வழிபட்டு வந்தால் தடைகள் அகலும். தரிசனத்தால் தனலாபம் பெருகும்.
Tags:    

Similar News