ஆன்மிகம்

செவ்வாய் தோஷம் போக்கும் விநாயகர் விரதம்

Published On 2017-09-09 09:13 GMT   |   Update On 2017-09-09 09:13 GMT
வளர்பிறை சுக்ல பட்சம்-தேய் பிறை கிருஷ்ண பட்சம் - எதுவானாலும் செவ்வாய்க்கிழமைகளில் வந்தால் அன்று விரதம் இருந்து விநாயகரை பூஜித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு

விநாயகரை நினைத்து அங்காரகன் தவம் செய்ய ஆரம்பித்தான்.

ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தான். விநாயகப் பெருமான் அவன் முன் தோன்றி அவனை நவக்கிரகங்களுள் ஒருவனாகவும் ராசி வீடுகளில் மேஷம், விருச்சிகம் இரண்டின் அதிபராகவும் செய்தார். போர் முறைகளை நன்கு கற்றதனால் அங்காரகனை நவக்கிரகங்களுள் ஒரு படைத்தலைவனாக அறிவித்தார்.

அது மட்டுமின்றி விநாயகர் அவனைச் சகோதரன் என்றும் அழைத்தார். இதன் காரணமாக அங்காரகன் சகோதர காரகனாகவும் விளங்க அருள் செய்தார். இதனால் தான் விநாயகருடைய சகோதரரான முருகப்பெருமானின் அம்சமாகவும் கருதி மக்கள் அனைவரும் செவ்வாயை வணங்கி வருகிறார்கள்.

அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சி அளித்த நாள் செவ்வாய்க்கிழமை. சதுர்த்தி திதி. அதனால் அங்காரகனுக்குச் செவ்வாய் என்ற பெயரும் ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமையை மங்கள வாரம் என்று அழைப்பார்கள். இதனால் அங்காரகனுக்கு மங்களன் என்ற பெயரும் உண்டு.

செவ்வாய்க்கிழமை சதுர்த்தி திதியில் விநாயகர் காட்சி அளித்தார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், வளர்பிறை சுக்ல பட்சம்-தேய் பிறை கிருஷ்ண பட்சம் - எதுவானாலும் செவ்வாய்க்கிழமைகளில் வந்தால் அன்று விரதம் இருந்து விநாயகரை பூஜித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
Tags:    

Similar News