ஆன்மிகம்

புத்திர பாக்கியம் அருளும் நாக பஞ்சமி விரதம்

Published On 2017-09-07 09:33 GMT   |   Update On 2017-09-07 09:33 GMT
நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாகபஞ்சமி விரதத்தை தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் விரதத்தை பின்பற்ற வேண்டும்.

நாக பஞ்சமி விரதம் ஏற்பட்டதற்கான புராண நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

காஸ்யபருக்கும் கத்ரு என்பவளுக்கும் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கினார், நாகர்.

இதனால் கோபம் கொண்ட தாயர் கர்து, தாய் சொல்லை கேளாததால் தீயில் விழுந்து இறந்து போகும்படி மகனுக்கு சாபம் கொடுத்தாள். ஜனமேஜயன் மூலம் அந்த சாபம் எப்படி நிறைவேறியது என்பதை பார்க்கலாம்.

பரிசட்த்து மன்னன் பாம்புகளின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ என்ற கொடிய நாகத்தால் கடிக்கப்பட்டு இறந்தான். தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இணத்தையே அழிக்க உறுதி பூண்டான் பரிசட்த்தின் மகன் ஜனமேஜயன்.

அதற்காக ‘சர்ப்பயக்ஞம்’ என்ற வேள்வியை நடத்தினான். பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்க்கு சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் ஒரு பஞ்சமி தினமாகும்.



எனவே இந்த நாக பஞ்சமி விரதம் ஆனி மாத சுக்லபஷ பஞ்சமியில் கொண்டாடும் வழக்கம் உள்ளது. இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

விரதமுறை

நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள். பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள். பால், முட்டை முதலியவற்றை நிவேதன பொருளாக வைத்து வழிபடுவார்கள். மூன்று அல்லது ஒன்பது முறை கோவிலை சுற்றி வலம் வருவார்கள்.

நிவேதனம்

நாக வழிபாட்டிற்கு என நிவேதனப் பொருட்கள் உள்ளன.

நிவேதனம்: புற்று வழிபாட்டில் பாலும், வாழைப் பழத்துண்டுகளும் முக்கிய இடம் பெறுகின்றன. புற்று வழிபாட்டுக்குரிய காணிக்கைப் பொருட்களைக் கருப்புத்துணியில் வைத்து சந்தனம், பூ இவற்றுடன் சேர்த்துப் பொழுது சாயும் நேரத்தில் புற்றில் செலுத்த வேண்டும்.
Tags:    

Similar News