ஆன்மிகம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்காக மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

Published On 2017-08-26 06:55 GMT   |   Update On 2017-08-26 06:55 GMT
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா அடுத்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்க்ள்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்து 2-ம் இடமாகவும்,தமிழகத்தில் முதலிடமாகவும் திகழும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந் திருவிழா இந்த வருடம் அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 30-ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.

தங்களின் வேண்டுகோள் நிறைவேற லட்சக்கணக்கான பக்தர்கள் விரதத்தை தொடங்குவார்கள். தற்போது விரதம் தொடங்கும் பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து பூசாரி கையினால் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர். தினசரி 100-க்கு மேற்பட்டவர்களும் வெள்ளி, செவ்வாய் மற்றும் விடுமுறை நாட்களில் 1000-க்கு மேற்பட்டவர்களும் மாலை அணிந்து விரதம் தொடங்கி வருகின்றனர்.

விரதம் தொடங்கியவர்கள் கோவிலில் கொடியேறியதும் தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூல் செய்வார்கள். மேலும் கலை நிகழ்ச்சிகளுடன் இணைந்து தசரா குழு அமைத்து ஊர் ஊராகச் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி காணிக்கை வசூல் செய்வார்கள்.

அம்மன் பெயரில் வசூலித்த காணிக்கைகள் மற்றும் பொருட்களை செப்டம்பர் 31-ம் தேதி கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள்.அன்றைய நாளில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். இவர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், கழிப்பிடம்,பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகமும். அறநிலையத்துறையினரும் இப்போதே செய்ய தொடங்கியுள்ளனர்.
Tags:    

Similar News