ஆன்மிகம்

இன்று முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை விரதம்

Published On 2017-07-19 09:05 GMT   |   Update On 2017-07-19 09:05 GMT
முருகனுக்கு உகந்த விரதங்களுள் முக்கியமான ஆடிக்கிருத்திகை நாளில் பக்தர்கள் முருகனுக்கு விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

அழகன் முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை விரதம்வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள்.

ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக, பக்தர்கள் நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

புண்ணிய தீர்த்தங்களில் நீராட முடியாதவர்கள் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது சிவன் கோவிலுக்கு மாலையில் சென்று நெய் தீபம் ஏற்றி முருகனை வழிபாடு செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
Tags:    

Similar News