ஆன்மிகம்

சிவபெருமானுக்கு உகந்த ஒன்பது விரதங்கள்

Published On 2017-06-08 08:37 GMT   |   Update On 2017-06-08 08:37 GMT
உணவு கட்டுப்பாடு ஒழுக்கத்துடன், சிவ விரதங்களாக கையாளப்படும் நமது விரதங்கள் ஒன்பது ஆகும். அந்த விரதங்கள் என்னவென்று பார்க்கலாம்.
சைவ சமய விரதங்கள் மனம் ஐம்பொறிகளின் தன்மைக்கு ஆட்பட்டு அலைபாயாது, பொய்யான ஆகைகளுக்கு ஆட்படாமல் மெய்ஞான வழியில் தங்களது நினைவை செலுத்த, நெறி பிறழாத நினைவால் இறைவனை ஒரு நிலைப்படுத்திய வழக்காக சில நியமங்களைக் கைக்கொள்ள வேண்டியுள்ளது.

முதலாவது மனக்கட்டுப்பாட்டுடன் உணவுக் காட்டுப்பாட்டினையும் கடைப்பிடித்திட வேண்டும். உணவின் தன்மைக்கேற்ற நமது சிந்தனைகள் மென்மை, கடினம் என்ற நிலையைப் பாதிப்பதால் நமது முன்னோர்கள் விரதங்களை கடைப்பிடித்தனர் – உணவு கட்டுப்பாடு ஒழுக்கத்துடன், சிவவிரதங்களாக கையாளப்படும் நமது விரதங்கள் ஒன்பது ஆகும். அவையாவின,

சோமவாரவிரதம்,
திருவாதிரை விரதம்,
உமா மகேஸ்வரி விரதம்,
சிவசாத்திரி விரதம்,
கேதார விரதம்,
கல்யாண சுந்தர விரதம்,
சூல விரதம்,
இடப விரதம்,
பிரதோஷ விரதம்,
கந்த சஷ்டி விரதம் ஆகும்.
Tags:    

Similar News