ஆன்மிகம்

படிப்பில் உயர்வு தரும் மாதங்கி ஜெயந்தி விரதம்

Published On 2017-05-17 06:04 GMT   |   Update On 2017-05-17 06:04 GMT
அம்பாளின் பத்து அவதாரங்களில் ஸ்ரீ மாதங்கி என்னும் வடிவமும் ஒன்று. படிப்பில் உயர்ந்த நிலையை அடைய விரும்புபவர்கள் மாதங்கி தேவிக்கு விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.
மகாவிஷ்ணுவுக்கு தசாவதாரம் இருப்பதைப் போல் அம்பாளுக்கும் பத்து அவதாரங்கள் உண்டு. அவற்றில் ஸ்ரீ மாதங்கி என்னும் வடிவமும் ஒன்று. மதங்கர் என்னும் மகரிஷிக்கு அருட் செய்ததால் இந்த அம்பாளுக்கு மாதங்கி என்றும் ராஜமாதாங்கீ என்றும் பெயர் ஏற்பட்டது. இந்த தேவீ, அவதாரம் செய்த நாளே மாதங்கி ஜெயந்தி என்று கூறப்படுகிறது.

அட்சய திருதியை தினத்தன்று விரதமிருந்து ஸ்ரீ ராஜமங்கீ தேவியின் படத்தை வைத்து ஆவாகனம் செய்து ரோஸ் கலரில் உல்ள ரோஜாப்பூ போன்ற பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். தேன் கலந்த பால்பாயாசம் நிவேதனம் செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதங்கி சுலோகத்தை சுமார் 21 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வருவதன் மூலம் எதிரிகள் இல்லாத வாழ்க்கை, சர்வஜன வசீகரம் எனப்படும் எல்லா மக்களுடனும் அன்பும் இணக்கமும் கொண்ட வாழ்வும் கிட்டும்.



புதன், வியாழக்கிழமைகளில் வலம்புரிச் சங்கில் சிறிது கற்கண்டு பச்சை கற்பூரம் கலந்த நீர் நிரப்பி இந்த மந்திரத்தை 108 எண்ணிக்கை கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து அந்த நீரை மாணவர்கள், குழந்தைகளை அருந்தச்செய்ய நல்ல நினைவாற்றலும் படிப்பில் உயர்வும் உண்டாகும்.

மந்திரம் :

ஓம் |
ஹ்ரீம் ஐம் ஸ்ரீம்|
நமோ பகவதி உச்சிஷ்டசாண்டாளி |
ஸ்ரீ மாதங்கிச்வரி |
சர்வஜன வசங்கரி ஸ்வாஹா||

இதை ஒரு வளர்பிறை புதன்கிழமை தொடங்கி ஜெபித்து வரவும்.

இதனால் செல்வம், படிப்பு, வசியம் சங்கீதம் ஆகிய நான்கு விதமான பலன்களும் ஏற்படும். குறிப்பாக சங்கீத வித்தையில் ஈடுபடுபவர்கள் தேர்ச்சியான அறிவை பெற்று புகழுடன் பிரகாசிக்கலாம்.

Tags:    

Similar News