ஆன்மிகம்

பித்ருக்களின் சாபம் நீக்கும் இந்திரா ஏகாதசி விரதம்

Published On 2017-05-16 04:47 GMT   |   Update On 2017-05-16 04:47 GMT
ஐப்பசி மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி எனப்படும். பித்ருக்களின் சாபத்தை நீக்கும் சக்தி இந்திரா ஏகாதசி விரதத்திற்கு உள்ளது.
ஏகாதசியின் மகிமை யுகங்கள் தோறும் வெளிப்படும் என்று சொல்லி, அது துவாபர யுகத்தில் வெளிப்பட்டதைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். இதோ, கிருத யுகத்தில் வெளிப்பட்ட ஓர் ஏகாதசியின் மகிமையை பார்ப்போம்.

மாஹிஷ்மதி நாட்டு மன்னர் இந்திரசேனனின் அரண்மனைக்கு நாரதர் வந்தார். "மன்னா, நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கே உன் தந்தை நரகத்தில் கிடந்து, துயரங்களை எல்லாம் அனுபவித்து வருகிறார். `என் மகனிடம் சொல்லி ஏகாதசி விரதம் இருக்கச் சொல்லுங்கள். என்னைக் கரையேற்றச் செய்யுங்கள்'' என்று என்னிடம் சொன்னார். அதற்காகத்தான் நான் வந்தேன்.



ஐப்பசி மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி எனப்படும். நீ அந்த ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபாடு செய். உன் தந்தைக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்" என்றார்.

திரிலோக சஞ்சாரியான நாரதரே வழிகாட்டி இருக்கிறார் என்றால், மன்னர் மறுப்பாரா? இந்திரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து, தந்தைக்கு சிரார்த்தம் செய்தார். அவருடைய தந்தையும் நரகத்தில் இருந்து விடுதலை அடைந்து மகனை ஆசீர்வதித்தார். பித்ருக்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி இது.
Tags:    

Similar News