ஆன்மிகம்

திருமுருகனின் அருள் கிடைக்கும் கல்யாண விரதம்

Published On 2017-04-26 09:35 GMT   |   Update On 2017-04-26 09:35 GMT
பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து, திருமுருகனை வேண்டி 48 ஆண்டுகள் தொடர்ந்து இவ்விரதமிருந்து வந்தால், அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீக தன்மையை அடையலாம் என புராணங்கள் கூறுகின்றன.
பங்குனி உத்திர நாளில், ஸ்ரீ ராமருக்கும், சீதா தேவிக்கும், ஸ்ரீ ரங்கநாதருக்கும், ஸ்ரீ ஆண்டாளுக்கும், சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சிக்கும் திருமணம் நடைபெற்றது என்பதால் கல்யாண விரத நாள் என்றும் அழைப்பார்கள். சிறப்பான முகூர்த்த நாளாக பங்குனி உத்திர நாளை இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.

பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து, திருமுருகனை வேண்டினால், பிறவிப்பலனையும், நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இவ்விரதமிருந்து வந்தால், அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீக தன்மையையும் அடையலாம் என புராணங்கள் கூறுகின்றன.



அதே நேரம், வருடம் முழுவதும் ஒழுக்கக்கேடாக இருந்து விட்டுப் பலன்கள் பெறும் நோக்கோடு பங்குனி உத்திர விரதத்தை மட்டும் தொடர்ந்து இருப்பவர்களை, சூரியன் சுட்டெரித்து விடுவான் என சூரிய புராணம் எச்சரிக்கிறது. ஏனெனில், பாவங்களை சுட்டுப் பொசுக்கக்கூடிய உத்திர நட்சத்திரத்தின் அதிபதியான சூரியன், மார்கழி மாதம் தொடங்கி புரட்டாசி மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக சக்தி பெற்று பங்குனியில் உச்சத்தை நோக்கி செல்கின்றான்.

முருகனுக்கு உகந்த இந்நாளில், சிவபெருமானையும், பார்வதி தேவியையும் திருமண கோலத்தில் நினைத்து தியானம் செய்து, வீட்டிலோ அல்லது ஆலயத்திற்கு சென்றோ வழிபட்டு ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், உடுத்திக் கொள்ள வேட்டி புடவையும் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால், முருகப்பெருமானின் அருளோடு சிவபெருமானின் அருளையும் பெறலாம்.

Similar News