ஆன்மிகம்

நாளை வெள்ளிக்கிழமை சுக்கிரவார விரதம்

Published On 2017-04-13 08:41 GMT   |   Update On 2017-04-13 08:41 GMT
சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் சுக்கிரவாரம் (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஒவ்வொரு சுக்கிரவாரமும் உமாதேவியாரை வணங்கி மனம் உருகி இருக்கும் விரதம் சுக்கிரவார விரதம் எனப்படும்.
சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் சுக்கிரவாரம் (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஒவ்வொரு சுக்கிரவாரமும் உமாதேவியாரை வணங்கி மனம் உருகி இருக்கும் விரதம் சுக்கிரவார விரதம் எனப்படும். இதை வெள்ளிக்கிழமை விரதம் என்று கூறுவதுண்டு.

அரக்கர்களால் அவதிப்பட்ட தேவர்கள் அம்பாளை நோக்கி தொழுது வேண்டினர். அப்போது அம்பாள் அவர்களுக்கு அபயம் அளித்து அரக்கர்களை வதம் செய்தாள். தேவர்களையும் முனிவர்களையும் காத்து ரட்சித்தாள். இதை முன்னிட்டே அம்பாளை தொழும் சுக்கிர வார விரதம் இருக்கும் வழக்கம் ஏற்பட்டது.

இவ்விரத தினங்களில் ஒரு பொழுது பகலில் உணவு கொள்ள வேண்டும். அம்பாளை பற்றிய பாராயணம், கதைகள் ஆகியவற்றை படிக்கலாம். மாலை பொழுதில் இல்லத்தில் அம்பாள் படத்தின் முன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பூஜிக்கலாம். கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து அம்பாளை வழிபடலாம்.

Similar News