ஆன்மிகம்

தடைபடும் திருமணம் விரைவில் நடைபெற விரத வழிபாடுகள்

Published On 2017-04-01 08:10 GMT   |   Update On 2017-04-01 08:10 GMT
ஒரு குடும்பத்தில் மனைவி விரதமிருந்து வழிபட்டால் மனைவிக்கு மட்டுமல்லாமல் கணவனுக்கும், குழந்தைக்கும் கூட நற்பலன்கள் கிடைக்கிறது.
ஒரு வீட்டில் கணவன் விரதமிருந்து வழிபட்டால் கணவனுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். ஆனால் மனைவி விரதமிருந்து வழிபட்டால் மனைவிக்கு மட்டுமல்லாமல் கணவனுக்கும், குழந்தைக்கும் கூட நற்பலன்கள் கிடைக்கிறது.

குடும்ப பாதிப்பு, கஷ்டங்கள்; தினமும் வீட்டில் [அல்லது] உள்ளூர் பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் விரதமிருந்து நெய்தீபம் ஏற்றி வழிபட பாதிப்பு நீங்கும்.

வீட்டில் குடும்பத்திலுள்ளவர்களில் யாருக்காவது அறுவை சிகிச்சை நடைபெற்றால் விரதமிருந்து வீட்டின் பூஜை அறையில் நெய் தீபம் விளகேற்றி வெள்ளை சிகப்பு அரளிப்பூ போட்டு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தம்பதியரின் பெயர், ஜெனம நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் தம்பதியர் இருவரும் ஒற்றுமையாக அன்னியோன்னிய நேசத்துடன் விளங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.

நிரந்தர நல்ல வேலை கிடைக்க செவ்வாய்க்கு அதிபதி முருகனை நம்பிக்கையுடன் விரதமிருந்து தினமும் வழிபட்டு வந்தால் 3 மாதத்திற்குள் வேலை கிடைக்கும்.



திருமணம் தாமதமாகி களத்திர தோஷத்திற்குள்ளான பெணகள் விரதமிருந்து செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணி முதல் 4.30. மணி ராகு காலத்தில் துர்க்கை அம்மன் சன்னதியில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றுவதோடு நவகிரகங்களை ஒனபது முறை சுற்றினால் திருமணம் விரைவில் நடைபெறும்.

விரதமிருந்து ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கைகூடும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் விரதமிருந்து மாலை ராகு காலத்தில் [4.30 மணி முதல் 6 மணி வரை] உள்ளூர் ஆலயத்திலுள்ள கால பைரவருக்கு செவ்வரளி மாலை, நெய் தீபம் 27 வாரம் ஏற்றி வர திருமணம் நடக்கும். 48 வது வாரம் நெய் தீபம் ஏற்ற எதிரி தவிடுபொடி, பில்லி, சூன்யம், சனி, நாக தோசம் மரண பயம் நீங்கும். காயத்ரி சொல்லி வழிபடுவது சிறப்பு தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு மிகச்சிறப்பு.

புத்ர தோஷத்திற்கு சக்தியுள்ள பரிகாரம்; வியாழக்கிழமைகளில் ஒரு வேளை உபவாசமும் மாலையில் திருக்கோவிலிலுள்ள தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமும் தொடர்ந்து ஏற்றிவர விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும். மாதவிடாய் சமயத்தில் இந்த விரதத்தை அனுஷ்டிக்காமல் வேறு யார் மூலமாவது நெய் தீபம் ஏற்றி வர வேண்டும், நம்பிக்கை அவசியம்.

Similar News