ஆன்மிகம்

தோஷம் போக்கும் மாசி மாத ஏகாதசி விரதம்

Published On 2017-02-07 09:15 GMT   |   Update On 2017-02-07 09:15 GMT
பிரம்மஹஸ்தி தோஷம், மூதாதையர்கள் மோட்சம், மன உளைச்சல் ஏற்படும் விரக்தி போன்றவை இந்த விரதத்தை கடைபிடித்தால் நம்மை விட்டு நீங்கும்.
மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா'' எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதையர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.

மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா'' எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும்.

மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா'' என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.

Similar News