ஆன்மிகம்

கன்னியரின் திருமண தடை நீக்கும் விரதம்

Published On 2016-12-13 09:24 GMT   |   Update On 2016-12-13 09:24 GMT
திருமண தடை நீங்க, விவாகம் முடிந்த பிறகு விவாகரத்து நடைபெறாமல் இருக்கவும் விஷ்ணுவையும் லட்சுமியையும் மார்கழி மாதத்தில் நோன்பு கொண்டாடி ஆலய தரிசனம் செய்ய வேண்டும்.
மார்கழி மாதம் திருப்பாவை, திருவெம்பாவை பாடி விரதமிருந்து கன்னிப் பெண்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து நீராடி, வாசலில் கோலமிட்டு கோலத்தின் மையத்தில் மங்கலம் தரும் மஞ்சள் நிற பூவான பரங்கிப் பூவை சாணத்தின் நடுவில் வைத்து மகாலட்சுமியை வரவேற்க வேண்டும். பிறகு ஆலயத்திற்குச் சென்று திருவனந்தலில் சிவன் வழிபாடும், நடராஜர் வழிபாடும் செய்தால் இறையருளால் இனிய வாழ்க்கை அமையும்.

காக்கும் கடவுளான விஷ்ணுவை மார்கழி மாதத்தில் காலை நேரத்தில் வழிபட்டால் கல்யாணமும் கைகூடும். கலகலப்பும் உருவாகும். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு கொண்டாடி இறைவனை மணந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

ஒரு சிலருக்கு காலம் காலமாகக் கல்யாணம் முடியாமல் இருக்கலாம். ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தாலும் கல்யாணத்தில் தடையும், பிரச்சினைகளும் உருவாகும். விவாகம் முடிந்த பிறகு விவாகரத்து நடைபெறாமல் இருக்கவும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியையும், விஷ்ணுவையும் லட்சுமியையும் மார்கழி மாதத்தில் நோன்பு கொண்டாடி ஆலய தரிசனம் செய்ய வேண்டும்.

Similar News