ஆன்மிகம்

பொருள் வரவைப் பெருக்கும் விநாயகர் விரதம்

Published On 2016-12-10 08:13 GMT   |   Update On 2016-12-10 08:13 GMT
பொருள் வரவைப் பெருக்க, திருணம தடை போக்க விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் நல்லது. இந்த விரதத்தை பற்றி கீழே பார்க்கலாம்.
திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டு வரவேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரி தனியாக எடுத்து வைக்கவேண்டும். 21-வது நாளில் சஷ்டியும், சதயமும் கூடும் நேரத்தில் ஆவல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னிதியில் ஐந்து வகைப் பொரி வைத்து, ஆவாரம் பூ அருகில் வைத்து, கருப்பட்டிப் பணியாரம் செய்து கணபதியை வழிபாடு செய்ய வேண்டும்.

நெல் பொரி, கம்புப் பொரி, சோளப்பொரி, அவல் பொரி, எள் பொரி என்பது ஐந்து பொரிகளாகும்.

விநாயகரை வழிபட வேண்டிய அந்த நாள், மார்கழி மாதம் 19-ந் தேதி (3.1.2017) அன்று வருகிறது. அன்றைய தினம் விரதமிருந்த விநாயகரை வழிபட்டு வந்தால் வாழ்வில் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

ஆண், பெண் யார் வேண்டுமானாலும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். திருமணம் தடைபடுபவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

Similar News