ஆன்மிகம்

ஐயப்ப பக்தர்கள் விரத காலத்தில் கவனிக்க வேண்டியவை

Published On 2016-12-07 09:27 GMT   |   Update On 2016-12-07 09:27 GMT
சபரிமலைக்கு விரதம் அனுஷ்டிக்கும் ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கீழே விரிவாக பார்க்கலாம்.
விரத காலத்தில்...எளிமை, சுகாதாரம், புனித எண்ணங்கள் ஏற்படுதல் ஆகியவையே ஐயப்ப விரதத்தின் தத்துவம். உடலும், மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.

மது, புகைபிடித்தல், அசைவ உணவு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அலங்காரம் செய்யக்கூடாது. முடி திருத்துதல், சேவிங் போன்றவை அனுமதிக்கப்படுவதில்லை. நீலம், கருப்பு, காவி நிறங்களில் வேட்டி உடுத்த வேண்டும்.

காலையும், மாலையும் நீராட வேண்டும். கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்துவிட வேண்டும். இடைப்பட்ட காலத்தில் மாலை அணிவதும், அதைக் கழற்றுவதும் கூடாது. வீடு திரும்பியதும் தேங்காய் உடைத்து பூஜை முடித்து அதன்பிறகே மாலையை கழற்ற வேண்டும்.

ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். சபரிமலை யாத்திரையின்போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். கற்பூர ஆழியில் ஐயப்பன்மார் கற்பூரத்தை இட்டு வழிபடுகிறார்கள்.

சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி என்ற தகுதியை பெறுகிறார்கள். ஒரே ஆண்டில் 18 முறை சென்றுவிட்டு, குருசாமி என கூற முடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு கட்டு கட்டி, 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி ஆக முடியும். இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பன் மார்களுக்கு மாலை அணிவிக்கலாம். இவர்கள் சபரிமலை சீசன் அல்லாத நாட்களில் கூட ஐயப்பனுக்கு பூஜை செய்து வரவேண்டும்.

Similar News