ஆன்மிகம்

ஐயப்ப பக்தர்கள் இன்று விரதத்தை தொடங்கினர்

Published On 2016-11-16 11:57 IST   |   Update On 2016-11-16 11:57:00 IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் புனித நீராடி மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.
கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளது. இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் புனித நீராடி மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.

கன்னியாகுமரியில் இன்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் பகவதியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை செல்லும் பக்தர்கள், கன்னிசாமிகளுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். அப்போது பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோ‌ஷம் எழுப்பினர். வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்து மாலை அணிந்தனர்.

இன்று காலை ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிந்தனர்.

10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளார்கள். நீலம், கருப்பு நிற உடை அணிந்து அவர்கள் வலம் வந்தனர். கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து இன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோ‌ஷம் எதிரொலித்தது.

மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.

Similar News