ஆன்மிகம்
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதமிருந்து எப்படி பூஜை செய்வது?
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதமிருந்து எப்படி பூஜை செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும். காலையில் ஸ்ரீமகாலட்சுமி படத்தை 12 அல்லது அதன் மடங்குகளில் வலம் வரவும். பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும். நெய் தீபம் ஏற்றவும். மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை 3 முறை பாடவும்.
நைவேத்தியத்தை பெண் குழந்தைகளுக்கு பிரசாதமாக பகிர்ந்து கொடுக்கவும். இதையே ஆடி மாதம் செய்தால் அதன் பெயர்தான் வரலட்சுமி விரதம். ஆடி மாதம் செய்யும்போது வயதான சுமங்கலிகளை வரவழைத்து அவர்களை வணங்கி ஆசி பெறுவது நன்று.