ஆன்மிகம்

நாளை வளர்பிறை ஏகாதசி விரதம்

Published On 2016-10-11 01:39 GMT   |   Update On 2016-10-11 01:39 GMT
துன்பங்களை போக்க நாம் வழிபட வேண்டியது அஜா அல்லது புரட்டாசி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி விரதமாகும். இந்த விரதம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.
முன் வினை காரணமாக நாம் ஏராளமான துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இந்த துன்பங்களை போக்க நாம் வழிபட வேண்டியது அஜா அல்லது புரட்டாசி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி விரதமாகும். வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) புரட்டாசி வளர்பிறை ஏகாதசி தினமாகும். இதனை விளக்கப் புராணத்தில் அரிச்சந்திர மகாராஜா கதை சொல்லப்பட்டிருக்கிறது. அரிச்சந்திர மகாராஜா அரசனாகப் பிறந்து செல்வ போகங்களை எல்லாம் அனுபவித்தார். மனதால் கூட பொய் பேசாமல் சத்தியம் காத்தார்.

இருந்தும் அவரது முன் வினைப் பயனாக அரசுரிமை இழந்தார். அது மட்டுமா? கட்டிய மனைவியை அடிமையாக விற்றார். மகனைப் பறி கொடுத்தார். இத்தனை துன்பங்களும் அவருக்கு முன்வினைப் பயனாக ஏற்பட்டன.

அரிச்சந்திர மகாராஜாவின் நிலை கண்டு மனம் இரங்கிய கவுதம மகிரிஷி, புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசியில் பெருமாளை வழிபட்டு விரதம் இருப்பதால் கிடைக்கும் நற்பற்பலன்களை எடுத்துக் கூறினார். அரிச்சந்திரனும் அப்படியே செய்ய அவரது முன்வினைகள் அழிந்து, மீண்டும் ராஜ்ஜியமும் சகல வைபோகங்களும் பெற்று வாழ்ந்தார்.

புரட்டாசி மாதத்தில் நாமும் நம்மால் இயன்ற விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். இதனால் இந்த ஜென்மத்து வினைகள், போன ஜென்மத்துப் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடலாம். அதோடு முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து அவர்களது பசியையும் தாகத்தையும் தீர்த்து அவர்களது ஆசிகளைப் பெறலாம்.

Similar News