ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கார்த்திகை விரதம்

Published On 2016-09-29 09:13 GMT   |   Update On 2016-09-29 09:13 GMT
கந்தனுக்கு உகந்த கார்த்திகை விரத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.
முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் கிருத்திகை. ஒவ்வொரு மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திரமன்று முருகப் பெருமானை நினைத்து வழிபடுவார்கள். 

அன்றைய தினம் விரதம் மேற்கொள்வதால் முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்றைய தினம் முருகன் கோவில்களில் விசேஷ ஆராதனைகள் நடைபெறும். அந்த தினத்தில் வீட்டிலும் முருகப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் இருக்கும் படத்தை வைத்து மாங்கனி நைவேத்தியம் படைத்து, கந்த கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். 

மேலும் கந்தனுக்கு பிடித்த கந்தரப்பம், பருப்பு பாயாசம், நைவேத்தியம் செய்து வழிபட்டால் 12 கரங்களை கொண்ட வேலன் வரங்களை அள்ளித் தருவான். ஆடி மாதம் வரும் கார்த்திகை மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் அன்னதானம் செய்வது நல்லது. 

Similar News