ஆன்மிகம்

விநாயகரிடம் அருள் பெறும் விரத வழிபாட்டு முறைகள்

Published On 2016-09-26 05:25 GMT   |   Update On 2016-09-26 05:25 GMT
விநாயகரின் அருள் கிடைக்க கடைபிடிக்க வேண்டிய விரத வழிபாட்டு முறைகளை கீழே பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் விநாயகருக்கு உகந்த நாட்கள். அன்றைய தினம் விரதமிருந்து செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி விநாயகரை வணங்க வேண்டும்.

சுக்ல சதுர்த்தசி அன்று விரதமிருந்து அருகம் புல்லை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டால் செயல்கள் பெற்றி பெறும்.

வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கி நல்லருள் பெறலாம்.

மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் விரதமிருந்து பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமணக்காலம் விரைவில் வரும்.

நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகும்.

வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றிவர குடும்பத்தில் வறுமை விலகும்.

சதுர்த்தியன்று அரிசி நொய்யைச் சாதமாக்கி பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளைகளாய் பாவித்துத் தூவ விநாயகர் மகிழ்ந்து குழந்தை வரம் தருவார்.

உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்பு வர வேண்டும் என்றால் சுக்ல சதுர்த்தி நாளில் குழந்தை பெயரில் விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்து பென்சில் நோட்டுக்களை 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் தானம் செய்ய வேண்டும்.

நாக்குப் பிறழாத குழந்தைகளுக்குத் தமிழ் மாதத்தில் 3-ம் செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு பழங்கள் படைத்து தானம் செய்தால் பலன் கிடைக்கும்.

Similar News