ஆன்மிகம்

குழந்தை பாக்கியம் கிட்டும் விரதம்

Published On 2016-09-07 08:10 GMT   |   Update On 2016-09-07 08:10 GMT
கொன்னையூர் மாரியம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் மாரியம்மன் கோவில். இங்கு திருவிழாக்கள் ஆடி அமாவாசை பிரசித்தி பெற்றதாகும். மற்ற மாதங்களைவிட ஆடி மாதத்தில் அம்மனை நினைத்து விரதமிருந்து வழிபட்டு இங்குள்ள நெல்லி மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அபிஷேக பிரசாதம் வழங்கப்படும். மேலும் அன்றைய நாளில் பெண்கள் விரதமிருந்து நெல்லி மரத்தில் தொட்டில் கட்டியும் திருமணம் நடைபெற மஞ்சள் கயிறு கட்டியும் சுகப்பிரசவம் நிகழ தொட்டிலும், வளையலும் கட்டி பிரார்த்தனை செய்கின்றனர்.

பக்தர்கள் தாங்கள் நினைத்தது நிறைவேறியதும் கண் மலர், உருவபொம்மை, உப்பு, மிளகு, அமோகமாக விளைந்த நெல் என நேர்த்திக் கடனைச் செலுத்தி, வணங்குகின்றனர்.

Similar News