ஆன்மிகம்

இன்று கிருஷ்ண ஜெயந்தி: விரதம் அனுஷ்டிக்கும் முறை

Published On 2016-08-25 08:00 IST   |   Update On 2016-08-25 08:01:00 IST
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று விரதம் அனுஷ்டிக்கும் முறையை பற்றி கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலையில் எழுந்த உடன் நீராடி பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் கிருஷ்ணர் படத்தை சுத்தம் செய்ய வேண்டும். 

கிருஷ்ண ஜெயந்திக்கு கோல மாவில் கிருஷ்ணர் கால் போடணும். வாசல் கோலத்திலிருந்து பூஜை அறையில் சுவாமி படம் வரை போட வேண்டும். பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலையில் தான் செய்ய வேண்டும். காலைலிருந்து ஏதும் சாப்பிடாமல் விரதம் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் காஃபி, ஜூஸ் என நீர் ஆகாரம் சாப்பிடவும்.

மாலையில் சாதம் (துளி நெய் ), வெந்த துவரம் பருப்பு, பால், தயிர்,வெண்ணை + சக்கரை, சுக்கு வெல்லம், உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், சுகியன், முறுக்கு, வேற ஒரு கார பக்ஷணம், அவல் + சர்க்கரை + தேங்காய் துருவல், உளுந்து வடை, பாயசம் போன்றவை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். பிறகு தேங்காய், வித விதமான பழங்கள், வெற்றிலை, பாக்கு, புஷ்பம் இவை எல்லாம் நைவேத்யங்களாக படைத்து தீப ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். ஆரத்தி காட்டிய பின்னர் நைவேத்திய பொருட்களை குழந்தைகளுக்கு தர வேண்டும்.

அதன் பின்னரே உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

Similar News