ஆன்மிகம்

விரதங்களுள் முதன்மையானது நவராத்திரி விரதம்

Published On 2016-07-14 13:45 IST   |   Update On 2016-07-14 13:45:00 IST
அம்பிகையைக் குறித்து மேற்கொள்ளும் விரதங்களுள் முதன்மையானது நவராத்திரி விரதம்.
அம்பிகையைக் குறித்து மேற்கொள்ளும் விரதங்களுள் முதன்மையானது நவராத்திரி விரதம்.

புரட்டாசி மாதத்தின் வளர்பிறை (சுக்ர பட்சம்) பிரதமை முதற்கொண்டு நவமி முடிய அனுசரிக்கப்படுவது நவராத்திரி விரதம்.

இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் - பிரதமை தொடங்கி பகலில் உணவு இன்றி - மாலையில் பூஜை முடித்தபின் நிவேத்ய பிரசாதம் உண்டு பால் பழம் அருந்துவர்.

ஓன்பதாம் நாளாகிய நவமியன்று உபவாசம் இருந்து பத்தாம் நாள் விஜய தசமியன்று காலையில் வழிபாடு செய்து மங்களகரமாக விரதத்தினை நிறைவு செய்வர்.

விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் - நவராத்திரி நாட்களில் - ஒரு நேரம் உணவு உண்டு பக்தி சிரத்தையுடன் அம்பிகையை இதயக்கமலத்தில் இருத்தி, தியானிக்க - பரிபூரண அருளைப்பெற்று நல்வாழ்வினை எய்தலாம்.

மகிஷனை வென்று நல்லோரைக் காத்தருளி அம்பிகையை போற்றும் பக்தியின் வெளிப்பாடு தான் - நவராத்திரி கொண்டாட்டங்கள்.

உண்மையான அன்புடன் எளிமையான வழிபாட்டின் மூலம் அம்பிகையின் அருளை பெறலாம் என்பது வெளிப்படை.

மனிதனின் அத்யாவசியங்களான கல்வி, செல்வம், வீரம் இந்த மூன்றனையும் அருளும்படி அன்னை ஆதிபராசக்தியை அவற்றுக்கு அதிபதிகளான ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீதுர்கை என்னும் அம்சங்களாக பாவித்து வழிபடுதலே நவராத்திரியின் நோக்கம்.

Similar News