ஆன்மிகம்
சாபம் நீக்கிய மகாலட்சுமி விரதம்
நடுவராகப் பொறுப்பேற்பவர்கள், அச்சமின்றி, நடுநிலை தவறாமல், நேர்மையுடனும் நீதியுடனும் தங்கள் தீர்ப்பைச் சொல்ல வேண்டும். அதை தவிர்த்த ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டால் அவர்களுக்கும் தண்டனை உண்டு என்பதையே சித்ரநேமி பெற்ற சாபமும், விமோசனமும் உணர்த்துகிறது.
கயிலாயத்தில் ஒரு நாள் சிவபெருமானும், பார்வதியும் சொக்கட்டான் (தாயம்) விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடுவதைமுனிவர்கள், சிவகணங்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த விளையாட்டிற்கு சிவகணங்களில் ஒருவனான சித்ரநேமி என்பவன் நடுவராக இருந்தான்.
சொக்கட்டான் விளையாட்டில் சிவபெருமான், பார்வதி இருவரும் நீண்ட நேரமாகச் சமநிலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த விளையாட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு, அங்கிருந்த அனைவருக்கும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் பார்வதி, சொக்கட்டான் உருட்டுவதற்கு முன்பாகக் காய்களை நகர்த்துவதற்குச் சிறிது நேரம் கணக்கிட்டுப் பார்த்து காலதாமதம் செய்தார். அதனைக் கண்ட சித்ரநேமி, அந்தவிளையாட்டில் சிவபெருமான் வெற்றி பெற்றதாக அறிவித்தான்.
அதனைக் கேட்டுக் கோபமடைந்த பார்வதி, ‘சித்ரநேமி! விளையாட்டு முடிவடையாமல் இருக்கும் போது, இறைவன் வெற்றிபெற்றதாக நீ எப்படிச் சொன்னாய்?’ என்று கேட்டார்.
‘அன்னையே! இறைவன் விளையாட்டில் சொக்கட்டானை உடனுக்குடன் உருட்டி விடு கிறார். ஆனால், நீங்கள் ஒவ்வொரு முறையும் சொக்கட்டானை உருட்டுவதற்கு கால தாமதம் செய்து கொண்டிருந்தீர்கள். இந்த முறை சொக்கட்டான் உருட்டுவதற்கு, அதிக நேரம் எடுத்துக் கொண்டீர்கள். அதனால்தான் இறைவன் வெற்றி பெற்றதாகச் சொல்ல வேண்டியதாகி விட்டது’ என்றான் சித்ரநேமி.
அவனது பதிலை பார்வதியால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. ‘சொக்கட்டான் உருட்டுவதற்கு முன்பாக, காய்களைநகர்த்துவதற்குக் கணக்கிட்டு பார்ப்பது வழக்கம்தானே? இதனைக் காலதாமதம் என்று நீ எப்படி முடிவு செய்தாய்?’ என்றுகேட்டார்.
சித்ரநேமி, ‘தாயே! சொக்கட்டான் உருட்டுவதற்கு முன்பு சிறிது நேரம் சிந்தித்து, பின் விளையாடுவது தவறில்லை. ஆனால், நீங்கள் ஒவ்வொரு முறையும் அதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டீர்கள். இந்த முறை மிக அதிகமாகக் காலதாமதம் செய்தீர்கள், அதனால்தான் நான் இறைவன் வெற்றி பெற்றதாகச் சொன்னேன்’ என்றான்.
அதைக் கேட்டு கோபமடைந்த பார்வதி, ‘இந்த விளையாட்டில் நான் சொக்கட்டான் உருட்டுவதற்கு முன்பு, ஒவ்வொரு முறையும் அதிக நேரம் எடுத்துக் கொண்ட தாகச் சொல்லும் நீ, அதைப் பற்றி எனக்கு ஒரு முறை கூட எச்சரிக்கை எதுவும் செய்யவில்லை, அப்படியிருக்கும் போது, நீயாகவே இறைவன் வெற்றி பெற்றதாக ஒரு தலைப்பட்சமாகத் தீர்ப்பு சொல்லித் தவறு செய்து விட்டாய். நடுநிலை தவறிய நீ கயிலாயத்தில் இருக்க தகுதியற்றவனாக ஆகிவிட்டாய். எனவே நீ பூலோகம் செல்வாய். நீ செய்த தவறுக்காக உன் உடல் தொழு நோயால் பாதிக்கப்படும். அனைவரும் உன்னை வெறுத்து ஒதுக்குவர்’ என்று சாபம் கொடுத்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சித்ரநேமி, ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தான்.
நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான், ‘தேவி! நீசித்ர நேமிக்கு அவசரப்பட்டு சாபம் கொடுத்து விட்டாய். விளையாட்டில் நீ சொக்கட்டான் உருட்டுவதற்கு முன்பாக பலமுறை காலதாமதம் செய்த போதும், அவன் உன்னுடைய தவறைச் சொல்லாமல் மறைத்து, உனக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான். கடைசியில், நீ சொக்கட்டான் உருட்டுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்ட போதுதான், அவன் வேறு வழியில்லாமல் நான் வெற்றி பெற்றதாகச் சொன்னான். உனக்கு ஆதரவாகச் செயல்பட்டவனுக்கு நீயே சாபம் கொடுக்க வேண்டியதாகி விட்டது’ என்றார்.
அதைக் கேட்ட பார்வதி, சிறிது நேரம் கண்களை மூடித் தியானித்தார். அவருக்கு விளையாட்டின் தொடக்கத்திலிருந்து முடிவு வரையிலான காட்சிகள் அனைத்தும் நினைவுகளாக வந்து சென்றன. அவருக்குத் தனது தவறும் தெரிந்தது, கோபமும் குறைந்தது.
பரிதாபத்துடன் அமர்ந்திருந்த சித்ரநேமியைப் பார்த்து, ‘இந்த விளையாட்டில் நீ எனக்கு ஆதரவாகச் செயல்பட்டு, நடுநிலைதவறியதால் உனக்கு என் வழியாகவே இறைவன் சாபம் கொடுக்கச் செய்து விட்டார். அதற்காக நீ கவலைப்பட வேண்டாம். நீ பூலோகத்தில் இருக்கும் காலத்தில், ஒருநாள் நீர் நிறைந்த அழகிய குளம் ஒன்றின் முன்பாகத் தேவலோகப் பெண்கள் புனிதமான விரதம் ஒன்றை மேற்கொள்வார்கள். அதனைப் பார்வையிடும் போது, உனக்கு நான் அளித்த சாபம் நீங்கிவிடும். அதன் பின்பு, நீ மீண்டும் கயிலாயம் வந்து சேரலாம்’ என்று விமோசனத்திற்கு வழி கூறினார்.
விமோசனம்
கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்து சேர்ந்த சித்ரநேமிக்கு, பார்வதி கொடுத்த சாபத்தின்படி உடல் முழுவதும் தொழுநோய்உண்டானது. அவனுடைய உருவம் முழுவதும் அருவருப்பான தோற்றத்துக்கு மாற்றமடைந்தது. அதனால் ஏற்பட்ட வேதனையைத் தாங்க முடியாமல் அவன் சத்தமிட்டு அழுதான். அவனைக் கண்ட பலரும், அந்த நோய் தங்களுக்கும் வந்து சேர்ந்து விடுமோ என்ற பயத்தில், அவனை விரட்டி அடித்தனர். இதனால் அவன் ஒரு இடத்தில் இருக்க முடியாமல் ஊர், ஊராக சுற்றிக்கொண்டிருந்தான்.
இப்படியே பல ஆண்டுகள் சுற்றித் திரிந்த அவன், ஒருகாட்டுப்பகுதியில் அழகிய நீர் நிறைந்த குளம் ஒன்றைப் பார்த்தான். அந்தக் குளத்தைச் சுற்றிலும் அழகிய பூக்களைக் கொண்ட தோட்டம் இருந்தது. அந்த இடத்திலிருந்து வீசிய நறுமணக் காற்று, அவனுடைய தொழுநோய்க்கு இதமாக இருந்ததால், அங்கேயே தங்கிவிட முடிவு செய்தான்.
அந்த இடத்தில், மண்ணால் ஒரு லிங்கத்தைச் செய்து, தோட்டத்திலிருந்து அழகிய நறுமணம் மிகுந்த மலர்களைப் பறித்து வந்து, லிங்கத்தை அலங்கரித்து வழிபடத் தொடங்கினான்.
அப்போது ஒருநாள் தேவலோகப் பெண்கள் சிலர் அந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்த குளத்தில் நீராடி, பின்னர், குளத்தின் கரையில் சந்தனத்தைக் கொண்டு மகாலட்சுமியின் உருவம் அமைத்து வழிபடத் தொடங்கினர்.
அதனைக் கண்ட சித்ரநேமி, தானும் போய் அந்த வழிபாட்டில் கலந்து கொண்டான். தேவலோகப் பெண்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்திய பொருட்களிலிருந்து வந்த நறுமணம், வேள்வியில் இருந்து வந்த புகை போன்றவை அவனுடைய உடலுக்குக் குளிர்ச்சியாகவும், இதமாகவும் இருந்தது. அத்துடன் அவனது உடலில் இருந்து தொழுநோய் புண்கள் சிறிது சிறிதாக மறையத் தொடங்கின.
இதனால் அவன் மகிழ்ச்சியில் திளைத்தான். தேவலோகப் பெண்களுடன் சேர்ந்து, அவர்கள் உச்சரித்த மந்திரத்தை சொல்லியபடி தானும் அந்த வழிபாட்டில் உற்சாகமாக பங்கேற்றான். தேவலோகப் பெண்கள் அந்த வழிபாட்டை முடிக்கும் வரை மந்திரத்தைச் சொல்லியபடி அமர்ந்திருந்தான். வழிபாட்டின் முடிவில் தொழுநோய் முழுவதுமாக குணமாகியிருந்தது.
தங்கள் வழிபாட்டை முடித்த தேவலோகப் பெண்கள், சித்ரநேமியைப் பற்றி விசாரித்தனர். அவர் பார்வதிதேவி அளித்த சாபம் பற்றியும், விமோசனத்திற்கான வழி பற்றியும் சொல்லி முடித்தான்.
பின்னர் அவன், தேவலோகப் பெண்களிடம், ‘நீங்கள் எதற்காக இங்கு வழிபாடு செய்தீர்கள்?’ என்று கேட்டான்.
‘செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி, நம்முடைய பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், விதிப்பலன்களுக்கேற்பவும் செல்வத்தை வழங்கி வருகிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான் நாங்கள் ‘வரலட்சுமிவிரதம்’ எனும் வழிபாடு செய்தோம். இந்த வழிபாட்டைப் பெண்கள் அனைவரும் ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமைகளில் செய்தால், அவர்களும், குடும்பத்தினரும் உடல்நலத்துடனும், செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள்’ என்றனர்.
அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த சித்ரநேமி, ‘உங்களோடு சேர்ந்து வழிபட்டதில் என்னுடைய நோய் குணமாகிவிட்டது. இதற்காக நானும் மகாலட்சுமி தேவிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு அவர்களிடம் இருந்து விடைபெற்று கயிலாயம் சென்றான்.