ஆன்மிகம்

ஸ்ரீ தத்தாத்ரேயர் விரத வழிபாடு

Published On 2016-05-31 11:17 IST   |   Update On 2016-05-31 11:18:00 IST
சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து மகனாகப் பிறந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்.
சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து மகனாகப் பிறந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்.

இவரது மந்திரம் ஞாபக சக்தி தரும். ஞானம், மோக்ஷம், நற்குணங்கள் தரும். (க்ஷிப்ர பிரசாதனர்) விரைந்து அருள் செய்பவர். இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற, கடன் தீர, அடமானம் வைத்த பொருள், நகைகளை மீட்ட, காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர்.   

ஸ்ரீ வித்யா உபாஸனை மந்திர சாஸ்திரத்தில் உயர்வான வித்தை இதைப் பற்றி இயற்றப்பட்ட கிரந்தங்களில் பெரியதும் சிறந்ததும் இவரால் இயற்றப்பட்டதே. அதை பின்பற்றி இவரது சீடரான ஸ்ரீ பரசுராமரால் சுருக்கமாக ஒரு கிரந்தம் இயற்றப்பட்டது. இன்றளவும் அந்த கிரந்தமே ஸ்ரீ வித்யா உபாசகர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அவதூதர்களுக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரே சத்குரு. சகுன உபாசகர்களுக்கு கற்பக மரம் போல் நல்வாழ்வு தருபவரும். நிர்குண உபாசகர்களுக்கு சத்குருவாய் விளங்கி ஆன்ம உயர்வு தந்து ஜீவசமாதி ஆகும் நிலை வரை அருள் செய்பவர்.

தத்தாத்ரேயர் ஜெயந்தியான இன்று இவருக்கு விரதமிருந்து வழிபாடு செய்வதான் மூலம் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம்.

Similar News