ஆன்மிகம்

நாகசதுர்த்தி விரதத்தை முதன்முதலில் எப்போது தொடங்க வேண்டும்

Published On 2016-04-23 13:49 IST   |   Update On 2016-04-23 13:49:00 IST
ஒவ்வொரு மாதமும் இந்த விரதத்தை பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் இந்த விரதத்தை பின்பற்ற வேண்டும். பாம்புகளின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ என்ற கொடிய நாகத்தால் பரிசட்த் என்ற மன்னன் கடிக்கப்பட்டு இறந்தான். தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இனத்தையே அழிக்க உறுதி செய்து, ‘சர்ப்பயக்ஞம்’ என்ற வேள்வியை நடத்தினான்.

பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார்.

அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் நாக சதுர்த்தி தினமாகும். எனவே நாக விரதம் ஆடி மாத சதுர்த்தியில் கொண்டாடும் வழக்கம் தோன்றியது.

முதல் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் ஆடி மாதத்தில் நாகசதுர்த்தி விரதத்தை தொடங்க வேண்டும்.

இந்த நாக சதுர்த்தி விரதத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள். பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள். 

Similar News