ஆன்மிகம்

சீதாதேவி அஷ்டமி விரதம்

Published On 2016-04-02 09:06 GMT   |   Update On 2016-04-02 09:53 GMT
பூமியின் புதல்வியாகிய அன்னை, தான், ஜனகனின் திருமகளாகப் போற்றப்பட திருவுளம் உவந்த‌ புண்ணிய தினம்.
ஜனக மகாராஜன், ஒரு வேள்வி செய்ய விரும்பி, அதற்கான நிலத்தைத் தேர்ந்தெடுத்தார்... யாகபூமியை சமம் செய்வதற்காக, முறைப்படி வழிபாடுகள் செய்து, எருதுகளில் தங்கக் கலப்பையைப் பூட்டி, உழ ஆரம்பித்தார்..அப்போது, ஓரிடத்தில், ஏர் முனை நகராது போகவே, அதை ஆராய்ந்து பார்த்ததில், ஒரு பெட்டி கிடைத்தது...பெட்டியில் சிறு குழந்தையாகத் திருமகள் தோன்றியருளினாள்

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினமே சீதா அஷ்டமி.. இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்கள் சிலவற்றிலும், தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் வைசாக சுக்ல நவமி தினம் சீதையின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகின்றது... எனினும் பெரும்பாலான பகுதிகளில் சீதையின் ஜெயந்தி உத்சவம் இன்று தான்..

இன்றைய தினம், ஸ்ரீ சீதா தேவிக்குப் பூஜைகள் செய்து வழிபடுவது மிக நல்லது..

இல்லங்களிலும், ஸ்ரீ சீதாராமரின் திருவுருவப்படத்திற்கோ அல்லது விக்ரகத்திற்கோ அபிஷேக ஆராதனைகள் செய்து, ஸ்ரீராமரின் அஷ்டோத்திரங்களைக் கூறி வழிபடலாம்.. அண்ணலின் திருநாமங்களைக் கூறியல்லவோ அனுமன் அசோகவனத்தில் அன்னையின் உயிர் காத்தான்!!...

திருக்கோயில்களில் அன்று விசேஷ வழிபாடுகள் செய்யப்படுவதால், கோயில்களுக்குச் சென்று ஸ்ரீ சீதாராமரை தரிசனம் செய்யலாம். இராமாயணம் பாராயணம் செய்வதும், ஸ்ரீராமஜெயம் எழுதுவதும் மிக நல்லது..

ஜானகி தேவியின் ஜன்ம தின உத்சவத்தில், விரதமிருந்து அன்னையின் அருங்குணங்களைச் சிந்தித்து வணங்கி, நலம் பெறுங்கள்.

Similar News