ஆன்மிகம்
ஏர்வாடி தர்கா நுழைவுவாயில் அடைக்கப்பட்டதால் வாசல் முன்பு காத்திருந்தவர்களை படத்தில் காணலாம்.

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா எளிமையாக நடந்தது

Published On 2021-07-05 02:44 GMT   |   Update On 2021-07-05 02:44 GMT
ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் 21 பேர் தலைமையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு அறிவிப்பின்படி வெளியாட்கள் மற்றும் யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் 847-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நேற்று மிக எளிமையாக நடந்தது. மாலை 6.45 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாவுதீன் ஆலிம் தலைமையில் மவுலிது ஓதப்பட்டு இரவு 10 மணி அளவில் மகான் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷஹீதின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் 21 பேர் தலைமையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு அறிவிப்பின்படி வெளியாட்கள் மற்றும் யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக உலக நன்மைக்காகவும் உலக மக்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து வருகிற 11-ந்் தேதி மாலை 5 மணி அளவில் கொடி இறக்கப்படும் என்று ஹக்தார்கள் தெரிவித்துள்ளனர்.

தர்கா உள்புறம் வெளியாட்கள் அனுமதிக்கப்படாததால் வெளியூர்களில் இருந்து வந்த யாத்திரீகர்கள் தர்கா நுழைவாயில் முன்பு காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Tags:    

Similar News