Today Rasipalan: இன்றைய ராசிபலன் 10.12.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.
ரிஷபம்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதாரத்தில் இருந்த தடை அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வர்.
மிதுனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
கடகம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்தழைப்பு கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசமடைவீர்கள்.
சிம்மம்
எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
கன்னி
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படும்.
துலாம்
பாக்கிகள் வசூலாகும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். ஆதாயம் தரும் தகவல் மதிய நேரம் வரலாம்.
விருச்சிகம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள்.
தனுசு
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
மகரம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
கும்பம்
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். தொழில் சீராக நடைபெறும்.
மீனம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் பலன் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவீர்கள்.